Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

14.4.14

முகம் பளபளப்புடன் திகழ இயற்கை மருத்துவம்.- (MUGAG ALAGU PERA IYARKAI MARUTHUAM)



தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.

ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்...

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றhக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

*சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்..

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும்.

வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் *ஆலிவ் ஆயிலைப்* பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

*பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,* அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக