Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

30.10.13

மாற்றுத்திறனாளிக்கு முதுகு பகுதி வழியாக ஓபன் ஹார்ட் சர்ஜரி.

இதயத்துக்கு போதிய ரத்தம் செல்ல முடியாமல் அடைப்பு இருந்தால், மாரடைப்பு ஏற்படும். ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டாலே உடனே இதயத்தில் எங்கு அடைப்பு உள்ளது என்று இதய நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் என்கிறார் முகப்பேரில் உள்ள பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனையின் முதன்மை இதய நிபுணர் டாக்டர் செரியன்.... 

மாரடைப்பு ஏற்பட்டால் இதயத்தில் செல்லக்கூடிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கும். மற்ற உறுப்பில் இருந்து இதயத்துக்கு செல்லும் நரம்பு பாதையில் அடைப்பு இருந்தால் அதை பைபாஸ் செய்து சீர் செய்யலாம். சில சமயம் இதயத்துக்குள் இருக்கும் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு இருக்கும். இதற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இவை நோயாளிகளின் உடல் நிலை பொருத்தே அமையும். சிலருக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருக்கும். அதை கட்டுப்பாட்டில் வைத்த பிறகே அறுவை சிகிச்சை செய்ய முடியும். ஆனால் இப்போது நூற்றில் எண்பது பேருக்கு இந்த பிரச்னை உள்ளது. ஆனால் நாங்கள் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கே இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.

அவர் கைகளையே கால்களாக பாவித்து நான்கு கால்களில் நடப்பவர். உடலின் மொத்த எடையும் கைகளில் தாங்கி குனிந்து நடப்பதால் அவரின் முதுகு தண்டு வளைந்து இருந்தது. விளைவு நெஞ்சு கூடு மற்றும் நுரையீரல் இருக்கும் நிலையிலும் மாற்றம். இதய அறுவை சிகிச்சை செய்யும் போது மார்பக பகுதியின் மையத்தில் தான் அறுவை சிகிச்சை செய்வோம்.

ஆனால் இவரின் தண்டு வடம் வளைந்து இருந்ததால், எல்லாருக்கும் செய்வது போல் செய்ய முடியாது. காரணம் நெஞ்சு சூட்டை விலக்கி அறுவை சிகிச்சை செய்வோம். விரிக்கப்பட்டு இருக்கும் நெஞ்சு எலும்பு காலப்போக்கில் ஒன்று சேர்ந்து விடும். இதற்கான சாத்தியம் இவருக்கு கிடையாது. அதை தவிர்க்க இவரின் இடது பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அதிலும் பல சிக்கல்கள் இருந்தன. முதுகு தண்டு வளைந்து இருந்ததால், இதயத்தை அடைய போதிய வசதி இல்லை. மேலும் இவரின் நுரையீரலும் பாதிப்படையாமல் கவனமாக செயல் பட வேண்டும். மிக சிரமத்தோடும் கவனமாகவும் ஒரு மாற்று திறனாளிக்கு முதுகு பகுதி மூலம் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது உலகிலேயே இதுவே முதல் முறை. இவ்வாறு டாக்டர் செரியன் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக